சென்னை,
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி, தளி வாய்க்கால் வடபூதிநத்தம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க விவசாயிகளிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
இக்கோரிக்கைகளை ஏற்று தளி வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த ஆண்டு மே 31ந்தேதி வரை மொத்தம் 490 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.