ஏற்காடு 
தமிழக செய்திகள்

ஏற்காடு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி-மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு, மலைப்பாதைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகவும் கவனமாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சேலம்,

தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு எச்சரிக்கை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் பயணிக்க விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கனமழை- தடை

சேலம் மாவட்டத்தில் பிரபல சுற்றுலா தலமான ஏற்காடு அமைந்துள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் சேலம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இந்த கனமழை காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல சேலம் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) மழை பொழிவு குறைந்துள்ளதை அடுத்து, இந்த தடை நீக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து சீரமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு, மலைப்பாதைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகவும் கவனமாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT