கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் ஆர்வமுடன் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி,

தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கனமழை காரணமாக குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் குற்றாலத்திற்கு குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் இன்று காலையில் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்த தால் வெள்ளப்பெருக்கும் குறைந்தது. இதனால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் ஆர்வமுடன் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

SCROLL FOR NEXT