தமிழக செய்திகள்

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்-அருவிகளில் உற்சாக குளியல்

2 நாட்கள் விடுமுறை எதிரொலியாக குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

அருவிகளில் உற்சாக குளியல்

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. மெயின் அருவி யில் தண்ணீர் மனதை குளிர்விக்கும் வகையில் கொட்டுகிறது. ஐந்தருவி யில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது. பழைய குற் றாலம், புலி அருவியில் தண்ணீர் மிதமாக விழுகிறதுநேற்று சுதந்திர தினம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை என 2 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால், வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குற்றாலத்தில் குவிந்தனர். அவர்கள், அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்

.

அலைமோதிய சுற்றுலா பயணிகள்

எனவே மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிப் பதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகமாக இருந்தபோது, சுற்றுலா பயணிகளை வரிசையில் நின்று குளிக்குமாறு போலீசார் அறிவுறுத்தி கண்காணித்தனர். குற்றாலத்தில் நேற்று காலையில் வெயில் அடித்த நிலையில், மாலையில் இதமான காற்று வீசியதால் ரம்மியமான சூழல் நிலவியது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.