தமிழக செய்திகள்

வார விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

அருவியில் நீர்வரத்து சீராகியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி,

‘குமரியின் குற்றாலம்' என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி, குமரி மாவட்டத்தின் சிறப்புவாய்ந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த அருவியைக் காண பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அருவியில் தண்ணீர் விழும் நேரங்களில் சுற்றுலா பயணிகள் ஆனந்தக்குளியல் போட்டு மகிழ்கிறார்கள்.

சுற்றுலா பயணிகள்

கடந்த சில நாட்களாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அருவியில் நீர்வரத்து சீராகியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உற்சாக குளியல்

இந்நிலையில் இன்று வார விடுமுறை தினத்தையொட்டி திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து திற்பரப்பு அருவியின் மேற்பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி சென்றும், செல்பி படம் எடுத்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

SCROLL FOR NEXT