தமிழக செய்திகள்

குற்றால அருவிகளை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

வார இறுதி என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

தென்காசி,

குற்றாலத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குற்றால அருவி

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குளுகுளு சீசன் நிலவுகிறது.

இன்று வார இறுதி தினம் என்பதால், குற்றாலத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது சீசன் களைகட்டிய நிலையில் மெயின் அருவியில் குளிக்க 3 மாதங்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மெயின் அருவியில் சீராக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.