தமிழக செய்திகள்

கும்பக்கரை அருவியில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நீர்வரத்து அதிகரிப்பால் கும்பக்கரை அருவியில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து நீர்வரத்து உள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கும்பக்கரை அருவியில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நீர்வரத்து சரியான பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT