தமிழக செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி: திருச்சி-பாலக்காடு ரெயில் சேவையில் மாற்றம்

திருச்சியில் இருந்து நாளை மதியம் 1 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை செல்லும்.

திருப்பூர்,

ஈரோடு-கரூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 29-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால் திருச்சி-பாலக்காடு ரெயில் நாளை மற்றும் 29-ந் தேதி ஆகிய நாட்களில் கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.

திருச்சியில் இருந்து நாளை மதியம் 1 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை செல்லும். அதன்பிறகு பராமரிப்பு பணி முடிந்த பின்னர் அந்த ரெயில், கரூரில் இருந்து பாலக்காடு டவுன் வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும். இந்த தகவலை ரெயில்வே கோட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT