தமிழக செய்திகள்

தண்டவாளம் பராமரிப்பு பணி: திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரெயில் 4 நாட்கள் ரத்து

தாதர்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் வாஞ்சிமணியாச்சி - நெல்லை சந்திப்பு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

நெல்லை சந்திப்பில் ரெயில்வே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு நெல்லை ரெயில் நிலையத்துக்கு வரும் பல்வேறு ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் 18-ந் தேதி வரை காலை 10 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர்-நெல்லை பயணிகள் ரெயில் (56004), மாலை 4.30 மணிக்கு புறப்படும் நெல்லை சந்திப்பு-திருச்செந்தூர் பயணிகள் ரெயில் (56003) ஆகியவை ரத்து செய்யப்பட்டு உள்ளன.

காலை ரெயில் பகுதியாக ரத்து

மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாள் காலை 7.05-க்கு புறப்படும் திருச்செந்தூர்-நெல்லை பயணிகள் ரெயில் (56752) செய்துங்கநல்லூர்-நெல்லை சந்திப்பு இடையே பகுதியாகவும், காலை 9.05 மணிக்கு புறப்படும் நெல்லை-திருச்செந்தூர் பயணிகள் ரெயில் (56753) நெல்லைசந்திப்பு-செய்துங்கநல்லூர் இடையே பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதே போன்று இன்றும் (திங்கட்கிழமை) 18-ந் தேதியும் தாதர்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் வாஞ்சிமணியாச்சி-நெல்லை சந்திப்பு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.