தூத்துக்குடி,
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த மின் பொருள் விற்பனையாளர் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை, மேல பொன்னகரம் 6-வது தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் ராஜசேகர் (வயது 46). இவர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் லாட்ஜில் உள்ள அறையில் கடந்த 12-ம் தேதி முதல் தங்கி, எலக்ட்ரிக்கல் பொருட்கள், மசாஜ் மிஷின் விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி இவரது அறையின் கதவு திறக்கப்படாமல் உள்ளேயே பூட்டியிருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் அறையின் கதவைத் திறந்து பார்த்தபோது, ராஜசேகர் இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாட்ஜ் அறையில் விற்பனையாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.