தமிழக செய்திகள்

சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

துவரங்குறிச்சி, ஆக.27-

துவரங்குறிச்சியை அடுத்த புதுக்குடியில் உள்ள கைகாட்டி - வளநாடு சாலையில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால், அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியோடு மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பின் போக்குவரத்தை சீர் செய்தனர்.