செங்கோட்டை:
தமிழகத்தில் இருந்து செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் செங்கோட்டை நகரில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதேபோல் நேற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இருமாநில பயணிகளும் பெரிதும் அவதி அடைந்தனர். இதற்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.