தமிழக செய்திகள்

கோவை அருகே 2 ராட்சத பாறைகள் சாலையில் விழுந்ததால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

பாறை விழுந்த சமயம் வாகனங்கள் ஏதும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கோவை,

2 ராட்சத பாறைகள் சாலையில் விழுந்ததால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே நேற்று இரவு 2 ராட்சத பாறைகல் திடீரென சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பாதை வழியே வாகனங்கள் ஏதும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

பாறையை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். பாறை சாலையின் நடுவே உள்ளதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு பாறையை கடந்து சென்றனர். இதனால் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT