தமிழக செய்திகள்

திண்டுக்கல்லில் சோகம்; குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

அவர்களின் உடல்களை மீட்டு, போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியாகி உள்ளனர்.

திண்டுக்கல்லில் குளத்தில் குளிப்பதற்காக சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். அவர்கள் நிஷ்வந்த் (வயது 13), தருண் (வயது 8), சபரி (வயது 9) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

அவர்களின் உடல்களை மீட்டு, போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி நடந்த முதல்கட்ட விசாரணையில், குளத்தில் நீரின் அளவு குறைவாக இருந்துள்ளது என்றும், அதனால் அவர்கள் சகதியில் சிக்கி பலியானார்கள் என்றும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT