தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் சோகம்: வீட்டில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு!

எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்து பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் வீட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் முதல் தெரு, பொன்சுப்பையா நகரைச் சேர்ந்த பாலுவின் மனைவி சரோஜா (64), நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, உறவினர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.