திருவாரூர்,
திருவாரூரில் தூக்குப்போட்டு கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் வாளவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது40). பேக்கரி கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி 9 வயதில் சஷ்டிகா என்றார் மகள் உள்ளார். முதல் மனைவி இறந்த நிலையில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த நதியா (38) என்பவரை அருண் 2-வதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். மகள் சஷ்டிகா திருவாரூர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று வழக்கம்போல் சஷ்டிகா வீட்டில் இருந்து புறப்பட்டு பள்ளிக்கு சென்றுள்ளார். மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சஷ்டிகா நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.
இதனையடுத்து அருகில் உள்ளவர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அருண் மற்றும் அவரது மனைவி நதியாவும் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளனர்.
இதுறித்து தகவல் அறிந்த திருவாரூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த அருண், நதியா ஆகியோரின் உடல்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து திருவாரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண் மற்றும் அவரது மனைவி நதியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.