தமிழக செய்திகள்

நண்பர்களுடன் கடலில் குளித்தபோது சோகம்: ராட்சத அலையில் சிக்கி மாணவி உயிரிழப்பு, மாணவர் மாயம்

கடல் அலையில் சிக்கி மாணவி உயிரிழந்த நிலையில், மாணவர் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 5 பேர், இன்று சென்னை எண்ணூர் கடற்கரை பகுதிக்கு சென்றனர். இந்த நிலையில் அவர்கள் கடலில் குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ராட்சத அலை எழுந்தது. இந்த ராட்சத அலையில் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் சிக்கினர்.

அலை அவர்களை கடலுக்குள் அடித்துச் சென்ற நிலையில், அருகில் இருந்த மீனவர்கள் மற்றும் நண்பர்கள் 2 மாணவிகளை மீட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பாண்டிச்சேரியை சேர்ந்த கிருத்திகா (18 வயது) என்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் ஆவடியைச் சேர்ந்த ஆகாஷ் (20 வயது) என்ற மாணவர் மாயமான நிலையில், அவரை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கடல் அலையில் சிக்கி மாணவி உயிரிழந்த நிலையில், மாணவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.