தமிழக செய்திகள்

வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கும் முகவர்களுக்கான பயிற்சி முகாம் கூட்டம் நடைபெற்றது: நயினார் நாகேந்திரன்

முகவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும், தீவிர கவனத்துடனும் செயல்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இன்றைய தினம் மதுரையில் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பணிகள் வரும் மே 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்,

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி மற்றும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பொறுப்பாளர் பியூஸ் கோயல் அவர்கள் தலைமையில் பாஜக சார்பில் வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கும் முகவர்களுக்கான பயிற்சி முகாம் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபடவுள்ள முகவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும், தீவிர கவனத்துடனும் செயல்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.

மேலும், தேர்தல் ஆணையம் வகுத்துள்ள அனைத்து விதிமுறைகளையும் முறையாகக் கடைபிடித்து, எந்தவித தவறும் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்பதையும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.