தமிழக செய்திகள்

தன்னார்வலர்களுக்கு பயிற்சி

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த செம்போடையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு குடும்ப தலைவிகளின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கு இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த பயிற்சியினை கோட்டாட்சியர் மதியழகன் தொடங்கி வைத்தார். வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன் கருத்துக்களை வழங்கினார். நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி திட்ட வேதாரண்யம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அரசமணி மற்றும் தலைஞாயிறு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர். இந்த பயிற்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT