தமிழக செய்திகள்

ரெயில் வர தினமும் தாமதம்... தண்டவாளத்தில் அமர்ந்த பயணி - சென்னை அருகே பரபரப்பு

தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணியை ரயில்வே போலீசார் சமாதானப்படுத்தி நடைமேடைக்கு அழைத்து வந்தனர்.

சென்னை,

ரெயில் தினமும் தாமதமாக வருவதை நிரூபிக்க பயணி தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

தண்டவாளத்தில் அமர்ந்த பயணி

சென்னையை அடுத்த திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் தினமும் தாமதமாக வருவதாக கூறி 40 வயதான பயணி குற்றஞ்சாட்டியுள்ளார். தினமும் இதே நிலை எற்பட்டுள்ளதால் ஆத்திரமடைந்த அவர் இன்று மின்சார ரெயில் செல்லும் தண்டவாளத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

'ஒரு நாள் தாமதமாக வந்தால் பரவாயில்லை... தினமும் தாமதமாக வந்தால் நாங்கள் எப்படி அலுவலகத்திற்கு செல்வது?' என்று குற்றம்சாட்டிய அந்த பயணி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதை அறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து சென்று தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணியை சமாதானப்படுத்தி நடைமேடைக்கு அழைத்து வந்தனர். பின்னர், சில நிமிடங்களில் திருநின்றவூர் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்தது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அந்த பயணி ரெயிலில் ஏறி சென்றார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT