தமிழக செய்திகள்

திருச்சி வழியாக செல்லும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி,

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்;

குருவாயூர்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில்

குருவாயூர்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16128) இன்று (செவ்வாய்க்கிழமை), வருகிற 10, 12,15,17,19,22,24,26, 29-ந் தேதிகளில் மற்றும் அடுத்த மாதம் 1,3,6-ந் தேதி களில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி செல்லும்.

நாகர்கோவில்-கோவை ரெயில்

அதேபோல, நாகர்கோவில்-கோவை ரெயில் (வ.எண்.16321) நாளை (புதன்கிழமை), வருகிற 11,13,16,18,20,23-ந் தேதிகளில் மற்றும் அடுத்த மாதம் 4,7-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி. திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் கரூர் செல்லும்.

SCROLL FOR NEXT