சென்னை,
தமிழக முதல் அமைச்சரக விஜய் பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக முக்கிய துறைகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் 3-வது நாளாக இன்றும் பல்வேறு துறைகளில் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:
*உதயநிதி துணை முதல்வராக இருந்த போது அவரது செயலாராக இருந்த பிரதீப் யாதவ் ஐடி துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
*கரூர் மாவட்ட ஆட்சியராக முத்துக்குமரன் நியமனம்
*மீன் வளத்துறை இயக்குநர் முரளிதரன், வேளாண் துறை இயக்குநராக இடமாற்றம்
*திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் ஆட்சியராக அப்துல் ரசாக் நியமனம்
*மாநில மனித உரிமை ஆணையராக முருகேஷ் நியமனம்
*வேளாண் துறை இயக்குநராக முரளிதரன் நியமனம்
*ஸ்ரீபெரும்பதூர் துணை ஆட்சியராக நல்லசிவன் நியமனம்
*கைத்தறி முதன்மை செயலாளராக டி.என்.வெங்கடேஷ் நியமனம்
*வேளாண் மற்றும் உழவர் நலத்துறை செயலாராக பி.சங்கர் நியமனம்
*காயத்ரி கிருஷ்ணன் - சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம்
*லதா - கூட்டுறவுத்துறை ஆணையராக நியமனம்