தமிழக செய்திகள்

அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையில் மரங்களை அகற்றும் பணி தீவிரம்

அமோனியா வாயு கசிவால் பலர் பாதிக்கப்பட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் செயல்பட்டு வந்த கடல் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி தொழிற்சாலையில் கடந்த மாதம் 21-ந்தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் 18 வடமாநில பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் பாதிக்கப்பட்டனர்.

விபத்துக்கு பிறகு, தொழிற்சாலையில் இருந்த அமோனியா வாயு அகற்றும் பணி 4 நாட்கள் நடைபெற்றது. பின்னர், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் அலுவலகம், குடோன், தளவாட அறை, குடியிருப்பு உள்ளிட்ட 5 பகுதிகளுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

தொழிற்சாலையில் கழிவுநீர் அகற்றும் பணியுடன், வளாகத்தில் உள்ள சுமார் 20 மரங்களை வெட்டி அகற்றும் பணியும் நடைபெற்றது. இதற்காக அங்கு மின்சார இணைப்பு துண்டிக்கப் பட்டது. இந்த பணிகள் இன்று மாலை அல்லது நாளைக்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தொழிற்சாலையின் பிரதான நுழைவாயிலுக்கும் அதிகாரப்பூர்வமாக 'சீல்' வைக்கப்பட உள்ளது.

SCROLL FOR NEXT