சென்னை,
சுதந்திரப்போராட்ட வீரர் அழகுமுத்து கோன் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரை புகழந்து தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அழகுமுத்துக்கோன் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் அரசு அதிகாரிகள் சென்னையில் உள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.