சென்னை,
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு கழகத்தின் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்துத உள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
17.9.2026 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-ஆவது பிறந்த நாளான வியாழக் கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை, அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியாருடைய திருஉருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது திருஉருவப் படத்திற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.