திருச்சி,
பெரம்பலூர் அரசறை அறிஞர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (65). இவர் சம்பவத்தன்று மதியம் தனியார் டவுன் பஸ்சில் சீனிவாசநகரில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு வந்தார்.
பஸ் நிலையத்தில் இறங்கிய போது அவரது பையில் இருந்த 4 பவுன் எடை கொண்ட 2 தங்க சங்கிலியை காணவில்லை. மர்ம நபர்கள் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சங்கிலியை திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.