தமிழக செய்திகள்

திருச்சி - பெங்களூரு சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

திருச்சி - பெங்களூரு சிறப்பு ரெயில் சேவை ஜூலை 14, 21, 28 ஆகிய தேதிகளிலும் நீட்டிக்கப்படுகிறது.

சென்னை,

திருச்சி - பெங்களூரு இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ரெயில் பயண நேரம்

திருச்சியில் இருந்து செவ்வாய்கிழமைகளில் காலை 6.15 மணிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயில் அன்று மதியம் 1.45 மணிக்கு பெங்களூருவை சென்றடைந்தது. மறுமார்க்கத்தில், இந்த ரெயில் மதியம் 3 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு திருச்சியை சென்றடைந்தது.

இந்த சிறப்பு ரெயில் சேவை ஜூலை 14, 21, 28 ஆகிய தேதிகளிலும் நீட்டிக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்க இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.