தமிழக செய்திகள்

திருச்சி- சார்லபள்ளி சிறப்பு ரெயில் சேவை ஜூன் மாதம் வரை நீட்டிப்பு

ரெயில் சேவை ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி,

திருச்சியில் இருந்து ஆந்திர மாநிலம் சார்லபள்ளிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 07616) வாரத்தில் ஒரு நாள் புதன்கிழமைகளில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சேவை ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதே போல் வாரத்தில் 1 ஒரு நாள் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் சார்லபள்ளி -திருச்சி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண் 07615) சேவை ஏப்ரல் 14-ந்தேதி முதல் ஜூன் மாதம் 2-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த ரெயில்கள் ஏசி இரண்டடுக்கு பெட்டிகள் 3, ஏசி மூன்றடுக்கு பெட்டிகள் 5, தூங்கும் வசதி பெட்டிகள் 10, இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் 4 உடன் இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.