திருச்சி,
ஆலங்குடி பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மானியத்துடன் கடன் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை ஆலங்குடி. கீரமங்கலம். கொத்தமங்கலம், பனங்குளம், குளமங்கலம் வட காடு, வம்பன், மாங்கோட்டை, பாச்சிக்கோட்டை, திருவரங்குளம், வெண்ணாவல்குடி, புள் ளான்விடுதி, கீழாத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து அதனை பராமரித்து வருகின்றனர். மாவட்டத்தில் அதிகப்படியாக தென்னை சாகுபடி ஆலங்குடியில் நடந்து வருகிறது.
தற்போதுதான் தேங்காய் உற்பத்தி ஓரளவுக்கு அதிகரித்து வரும் நிலையில் அதன் விலைதான் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் கூறி வருகின்றனர். தேங்காய் வரத்து அதிகமாக உள்ளதால் ஆயுத பூஜைக்கு, தேங்காய் அதிக விலை போகாத சூழல் நிலவுவதாக வியாபாரிகள், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இப்பகுதியில் விலையும் தேங்காய்கள் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், காரைக்குடி, சிவ கங்கை, மதுரை, சேலம், நாமக்கல், கரூர் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வாரச்சந்தை மற்றும் உழவர் சந்தைகளுக்கு மொத்த வியாபாரிகள் மூலம் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் விற்பனை நடைபெற்று வருகின்றன.
மேலும் தேங்காய் மொத்த வியாபாரிகள் மூலமாக காங்கேயம், திருச்சி, சென்னை, தூத்துக் குடி. சேலம் போன்ற பெருநகர பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் கூறப்படு கிறது.
தேங்காய் எண்ணெய் எடுக்க பயன்படும் கொப்பரை தேங்காய் விலையும் வீழ்ச்சி கண்டுள்ள தால் தற்போது கடைகளில் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கப்படுகின்றது.
ஆலங்குடியில் அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் ஆண்டு முழுவதும் செய்ய வேண்டும். தற்போது ஒரு சில குறிப்பிட்ட மாதங்கள் மட் டுமே அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருவதாக கூறப்ப டுகிறது.
கடந்த வாரம் தேங்காய் ரூ.26. ரூ.27-க்கு விற்றது. தற்போது ரூ.23 முதல் ரூ.24 வரை விற்ப தாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதில் உரிதேங்காய் ஒரு டன் ரூ.45 ஆயிரம் வரை விற்பதாக கூறுகின்றனர். ஒரு கிலோ கொப்பரை தேங்காய் கிலோ ரூ.154-க்கு விற்பதாகவும், ஒரு டன் கொப்பரை தேங்காய் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் விற்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் விலை ரூ.330 முதல் ரூ.400 வரை விற்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
தற்போது ஆயுத பூஜையையொட்டி கூட தேங்காய் விலை உயர்வு பெறவில்லை. விற்பனை குறைவதால் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலைப்பட்டு வருகின்றனர்.
தென்னை விவசாயிகளுக்கு ஆலங்குடியில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மேலும் தென்னை விவசாயிக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.