தமிழக செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக திருச்சி-பாலக்காடு ரெயில் பகுதியாக ரத்து

திருச்சி - ஈரோடு இடையே மட்டும் இயக்கப்படும்.

கோவை,

ஈரோடு-திருப்பூர் இடையே பெருந்துறை ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்சி-பாலக்காடு ரெயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணிகள்

இதுதொடர்பாக, சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மதியம் 1 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் திருச்சி பாலக்காடு ரெயில் (எண் 16843) திருச்சி - ஈரோடு இடையே மட்டும் இயக்கப்படும். அதன்பின்னர் ஈரோடு - பாலக்காடு இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.