தமிழக செய்திகள்

திருச்சி - பாலக்காடு ரெயில் சேவையில் இன்று மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கரூர்,

ஈரோடு - திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில்வே பாலத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பொறியியல் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கரூர் மார்க்கமாக செல்லும் திருச்சி பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16843) சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரெயிலானது திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு வரும். இந்த ரெயிலானது பொறியியல் பணிகள் காரணமாக ஈங்கூர் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இருப்பினும் பணிகள் முடிந்த பின்னர் இந்த ரெயிலானது ஈங்கூர் பாலக்காடு டவுன் ரெயில் நிலையங்களுக்கு இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும். இதனைதொ டர்ந்து இந்த ரெயிலானது இருகூர் -போத்தனூர் இடையே வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரெயிலானது வழக்கமாக நிற்கும் சிங்காநல்லூர், பீளமேடு, கோவை வடக்கு, கோவை ரெயில் நிலையங்களில் நிற்காது என தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT