தமிழக செய்திகள்

திருச்சி: ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அமராசூர் பகுதியை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (54). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை கல்லக்குடி-கல்லகம் ரெயில் நிலையங்களுக்கு இடையே அந்த வழியாக சென்னை மார்க்கமாக சென்ற ஒரு ரெயில் மோதி இறந்து கிடந்தார்.

இதுகுறித்து விருத்தாசலம் ரெயில்வே இருப்பு பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து வைத்தியலிங்கம் தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.