தமிழக செய்திகள்

அரசு பள்ளிகளில் 1-ம் தேதி முதல் செயலி மூலம் வருகைப்பதிவு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அரசு பள்ளிகளில் ஜனவரி 1-ம் தேதி முதல் செயலி மூலம் வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் செயலி மூலம் வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், ஊழியர்களின் வருகையை பதிவு செய்ய புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் ஜனவரி 1-ம் தேதி முதல் ஆசிரியர்கள், ஊழியர்களின் வருகையை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களின் வருகையையும் இந்த செயலி மூலமாக பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT