தமிழக செய்திகள்

சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல - ஜெயக்குமார்

Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க என அதிமுக முன்னாள் அமைச்ச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் விஜய், குட்டிக் கதை ஒன்றை கூறினார். ஒரு ஊருல பெரியவர் வெயில் அதிகமாக இருப்பதாக தெரிவித்து கண்ணில் கைவைத்து தேடிக்கொண்டு இருந்தார்.

அருகில் இருந்த சிறுவன் ஒருவன் என்ன தேடுறீங்க என்று கேட்க, அந்த பெரியவர், உங்க அப்பா இங்கதான் இருப்பாருன்னு சொன்னங்க.. அவரைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறேன். உங்க அப்பாவைக் காணோம்" என்று கூறிவிட்டு எங்களுக்கும் இதேபோல, நக்கலும் நையாண்டியும் பண்ண தெரியும் என திமுகவை மறைமுகமாக சாடினார். கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வியை விமர்சித்து முதல்-அமைச்சர் விஜய் இவ்வாறு பேசி இருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தநிலையில், இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் தள பதிவில்,

சார் நான் ஒரு ஆக்க்ஷன் பண்ணிக்கலாமா!?

நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வரானது வரை திரு.விஜய் அவர்களின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது... வாழ்த்துக்கள்!!

ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல....

"5 நிமிசம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல" என்று பஞ்ச் அடிக்கும் முதல்வர் அவர்களே, அதையே தான் நாங்களும் சொல்றோம் மின்வெட்டு, விவசாயிகளின் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு பற்றியோ அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றியோ ஒரு 5 நிமிஷமாச்சு பேசுங்க....

Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க!!! என அதில் பதிவிட்டுள்ளார்.