தமிழக செய்திகள்

த.வெ.க. சார்பில் 2-வது கட்டமாக கல்வி உதவித்தொகை; முதல்-அமைச்சர் விஜய் இன்று வழங்குகிறார்

மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை விழா அரங்கிற்கு 12 மணிக்குள் அமர வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

த.வெ.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10, 12-ம் வகுப்பு தேர்வில் மாவட்டம் மற்றும் சட்டசபை தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு கல்விச்சான்றிதழ், உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான முதல் கட்ட விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கடந்த 4-ந்தேதி சென்னை நீலாங் கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.

இந்தநிலையில், 2-வது கட்ட பரிசளிப்பு விழா இன்று (வியாழக்கி ழமை) நீலாங்கரையில் நடக்கிறது. இதில், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கிறார்கள். அவர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்குகி றார். பகல் 2 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது.

மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை விழா அரங்கிற்கு 12 மணிக்குள் அமர வைக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அமைச்சர் ஆனந்த் உத்தரவிட்டு இருக்கிறார். தொடர்ந்து, நாளை (வெள்ளிக்கிழமை) சேலம், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் கல்வி உதவித் தொகை மற்றும் சான்றிதழ் வழங்க இருக்கிறார்.

SCROLL FOR NEXT