திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அருகேயுள்ள புதுமை கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (47). இவர் தமிழக வெற்றி கழகத்தின் கிளைக் கழக செயலாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, தனது கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்-அமைச்சராக வேண்டி, சுமார் 16 அடி நீளம் கொண்ட வேலை அலகாகக் குத்திக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தித் தனது தீவிரப்பற்றை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்-அமைச்சர் ஆக முடியாத சூழல் நிலவி வருவதாகக் கருதி மனமுடைந்த இசக்கியப்பன், கடந்த சனிக்கிழமை திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.