தமிழக செய்திகள்

அண்ணா நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் ராம்குமார் வெற்றி

சென்னை அண்ணா நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் ராம்குமார் வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பல்வேறு தொகுதிகளில் வெற்றி விவரங்கள் தெரிய தொடங்கியுள்ளது. அந்த வகையில், சென்னை அண்ணா நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் ராம்குமார் வெற்றி பெற்றுள்ளார்.

ராம்குமார் 71,375 வாக்குகள் பெற்று 21,363 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சித்ரா ராசு 50,012 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார். அதிமுக வேட்பாளர் கோகுல இந்திரா 34,382 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

தவெக 2 இடங்களிலும், திமுக கூட்டணி 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் தற்போதய நிலவரப்படி தவெக 105 இடங்களிலும், திமுக கூட்டணி 70 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.