தவெக நிர்வாகி செங்கோட்டையன் 10 ஆவது முறையாகவும், தொடர்ந்து 5 ஆவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளார் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார். எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து தவெகவுக்குச் சென்ற செங்கோட்டையன் தனது தொகுதியில் முதல்முறையாக தவெக சார்பில் போட்டியிட்ட்ட அவர் வெற்றியை பெற்றுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி தவெக -108, திமுக - 66, அதிமுக 60 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆட்சியமைக்க 117 தொகுதிகள் பெரும்பான்மை தேவை.