தமிழக செய்திகள்

நவ.4-ல் தவெக கல்வி விருது விழா ; முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பு

அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மாணவர்கள் பங்கேற்கிறார்கள்

சென்னை,

தவெக சார்பில் பனையூர் அலுவலகத்தில் நவ.4ஆம் தேதி நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்கிறார் முதல்-அமைச்சர் விஜய்.

10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு தவெக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக பல்வேறு கட்டங்களாக மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பிக்கப்படும்.

அந்த வகையில், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி விருது விழா நவ. 4ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த விழாவில் 5 மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் சான்றிதம் மற்றும் ஊக்கத்தொகை வழங்க உள்ளார்.

முன்னதாக, சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று 5 மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடம் விழாவில் பங்கேற்பதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT