தமிழக செய்திகள்

முதல்-அமைச்சரின் உத்தரவை மீறி செயல்பட்ட தவெக நிர்வாகி!

தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி முதல் அமைச்சரின் உத்தரவை மீறி செயல்பட்டார்.

விருதுநகர்,

கடந்த மாதம் பள்ளி மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் தவெக உறுப்பினர்கள் தேவையில்லாமல் ஆய்வு மேற்கொள்ளக்கூடாது. அத்துமீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல் அமைச்சர் சி.ஜோசப் விஜய் உத்தரவிட்டிருந்தார்.

உத்தரவை மீறிய நிர்வாகி

இந்த நிலையில், தவெக நிர்வாகியான விக்னேஷ்குமார் இன்று (புதன்கிழமை) விருதுநகர் மற்றும் சிவகாசி பகுதியிலுள்ள மாநகராட்சி நூலகங்கள் மற்றும் அறிவுசார் மையங்களில் ஆய்வினை மேற்கொண்டார். பின்னர் அங்குள்ள பயிற்சியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டார். இது குறித்த வீடியோ பாடலுடன் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

கட்சித் தலைமையின் அறிவுறுத்தலுக்கு மாறாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுதொடர்பாக கட்சி நிர்வாகம் சார்பில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.