தமிழக செய்திகள்

விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் தவெக அரசு - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

தஞ்சையில் ஆகஸ்ட் 3-ந்தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

“பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி - மேகதாது பிரச்சினையை கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது - மேட்டூர் அணையில் இருந்து ஜுன் 12 அன்று தண்ணீர் திறக்காதது - காவிரி பிரச்சினையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட மறுப்பது - கர்நாடக முதல்வரை சந்திக்கப் போவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை உலவவிட்டு ஆழம் பார்ப்பது...

இப்படி தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்யும் #ShootingModel த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில், கழகத்தின் சார்பில் தஞ்சை மாநகரில் வரும் ஆகஸ்ட்-3 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம். தஞ்சையில் கூடுவோம் - விவசாய விரோத கால்ஷீட் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம்!”

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.