எடப்பாடி பழனிசாமி 
தமிழக செய்திகள்

தவெக ஆட்சி தானாகவே கவிழும்: எடப்பாடி பழனிசாமி ஆருடம்

தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் பாதுகாப்பில்லை. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. தமிழகத்திலேயே போதைப்பொருள் தயாரிக்கும் அளவுக்கும் நிலமை மோசமாகியுள்ளது. பல எதிர்க்கட்சிகள் இதுகுறித்து பேசும்போதெல்லாம் முதல்வர் வாய் திறக்கவில்லை. தொழில் முதலீட்டை ஈர்க்கும் சக்தி தவெக அரசுக்கு இல்லை

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது. இரு தரப்பு வாதங்களை கேட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இறுதி தீர்ப்பு வந்தபிறகுதான் கருத்து சொல்ல முடியும் போதைப்பொருட்களை தடுப்போம் என்று வாய்ஜாலம் காட்டாமல் தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செஞ்சி சிறுமி மாயமாகி 40 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை முதல்வர் அது பற்றி பேசவில்லை. அதிமுகவிடம் 41 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். குறைவான எம்.எல்.ஏக்களை வைத்து எங்களால் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும்? மக்களுக்கு தவெக ஆட்சி மீது வெறுப்புணர்வு வந்துவிட்டது. இந்த ஆட்சி தானகவே கவிழும்” என்றார்.

SCROLL FOR NEXT