தமிழக செய்திகள்

தமிழ்நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும் தவெக அரசு: கனிமொழி எம்.பி கண்டனம்

திமுக ஆட்சியில் ரூ.10-க்குக் குறைவாக மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாக கன்மொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சனையைத் தீர்க்க முடியாமல், காற்று இல்லை, மழை இல்லை, என தினமும் கதையடித்துவிட்டுக் கொண்டிருந்தவர்கள், உண்மைகளை மறைக்க முடியாமல் இன்றைக்குத் தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவில் யூனிட் ஒன்றுக்கு ரூ.35 கொடுத்து வாங்க இருக்கிறார்கள்.

திராவிட மாடல் ஆட்சியில் ரூ.10-க்குக் குறைவாக மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த அரசின் மெத்தனத்தால் இன்றைக்கு ரூ.35-க்கு வாங்கும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருக்கிறது.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொன்னால் கஜானா காலி என கையை விரிப்பவர்கள், இன்று கொள்ளை விலையில் கொள்முதல் செய்து தமிழ்நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரிக்க உள்ளனர். இதுதான் தவெக அரசின் “மாற்ற” அரசியலா?”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT