தமிழக செய்திகள்

அதிரடியாக களமிறங்கும் தவெக தலைவர் விஜய்; நாளை பிரசாரத்தை தொடங்குகிறார்...!

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் நடவடிக்கையை துரிதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று அறிவித்தார். இதில் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளார்.

இதையடுத்து, தவெக தலைவர் விஜய் நாளை முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை 5 தொகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

பெரம்பூர் - பெரம்பூர் தொகுதி (பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை)

திரு விக நகர் - திரு விக நகர் தொகுதி (3 மணி முதல் 4 மணி வரை)

பெரவள்ளூர் - கொளத்தூர் தொகுதி (மாலை 5 மணி முதல் 6 மணி வரை)

திருமங்கலம் - அண்ணாநகர் தொகுதி (மாலை 6 மணி முதல் 7 மணி வரை)

சிட்கோ நகர் - வில்லிவாக்கம் தொகுதி (இரவு 7 மணி முதல் 8 மணி வரை)

அயனாவரம் - திரு விக நகர் தொகுதி (இரவு 8 மணி முதல் 10 மணி வரை)