சென்னை,
தமிழகம் , புதுச்சேரியில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. அதன்படி, இன்று தொடங்கும் பொதுத்தேர்வு அடுத்த மாதம் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 9 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்.
உயர்கல்விக்கு அடித்தளமாக அமையும் இத்தேர்வினைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, நல்ல மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைக்க வாழ்த்துகள்!
நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!
இவ்வாறு தெரிவித்துள்ளார்.