தமிழக செய்திகள்

‘அரசு விவகாரங்களில் த.வெ.க.வினர் தலையிடக் கூடாது..’ - பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவுரை

முதல்-அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வது நம் கடமையாகும் என்று என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தென்காசி, தாம்பரம் அரசு மருத்துவமனைகளில் த.வெ.க.வினர் ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் அரசு விவகாரங்களில் த.வெ.க.வினர் தலையிடக் கூடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவுரை வழங்கி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “அரசு விவகாரங்களில் த.வெ.க.வினர் தலையிடக் கூடாது. த.வெ.க. தோழர்கள் தங்களுடைய எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடவோ ஆய்வுகளை மேற்கொள்ளவோ கூடாது

முதல்-அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வது நம் கடமையாகும். முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்துள்ள சூழலில் நமக்கான பொறுப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT