சென்னை,
தமிழ் திரையுலகின் உச்ச நடிகராக வலம் வந்த விஜய் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி த.வெ.க. என்ற கட்சியை தொடங்கினார். கடந்த சட்டசபை தேர்தலில் முதல் முறையாக தேர்தல் களம் கண்ட த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
34.92 சதவீத வாக்குகளை அள்ளி தி.மு.க., அ.தி.மு.க. பாரம்பரிய கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. இதை தொடர்ந்து கடந்த மே 10-ந்தேதி தமிழகத்தின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றார். இதற்கிடையே, த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கை தற்போது 2 கோடியை கடந்துள்ளது.
தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட கட்சிகளில் அதிக உறுப்பினர்களை கொண்ட முதல் கட்சியாக த.வெ.க. தற்போது உருவெடுத்து இருக்கிறது. இதனை சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு த.வெ.க. வினர் தெறிக்க விட்டு வருகின்றனர்.