தமிழக செய்திகள்

வி.சி.க. தலைவர் திருமாவளவனுடன் த.வெ.க. அமைச்சர்கள் சந்திப்பு

மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அவரது கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று இன்று த.வெ.க. அமைச்சர்கள் இன்று நேரில் சந்தித்து பேசினர்.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT