தமிழக செய்திகள்

தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது உரிய நடவடிக்கை கோரி மாதர் சங்கர் ஆர்ப்பாட்டம்

தவெக எம்.எல்.ஏக்கள் பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தொல்லை கொடுப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல் -அமைச்சர் விஜய் எச்சரிக்கை கூறி இருந்தார்.

சென்னை,

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ். இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூகவலைதளங்களில் இதுகுறித்த தகவல்கள் பரவிய நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கிடையில் நேற்று முதல்-அமைச்சர் விஜய் தவெக எம்எல்ஏக்களை நேரில் சந்தித்து இருந்தார். அப்போது பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தொல்லை கொடுப்பது தெரியவந்தால் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பேன் என்று விஜய் எச்சரிக்சை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி திரிசூலி என்பவர் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்TVK மீது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகார் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், மாவட்ட கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது உரிய நடவடிக்கை கோரி, சென்னை பனகல் மாளிகை அருகே அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குற்றவாளியை பாதுகாப்பது ஆட்சிக்கு அழகில்லை.. பெண்களையும் குழந்தைகளையும் ஏமாற்றாதே.! பாலியல் குற்றவாளிகளை எக்காரணத்தைக் கொண்டும் பாதுகாக்காதே.." என முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

"கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு மன்னிப்புக் கேட்கணும். எதுக்காக இதை மறைக்குறீங்க? அருள் விக்னேஷை ஏன் பாதுகாக்குறீங்க?" என பாலபாரதி கேள்வி எழுப்பி உள்ளார்.

SCROLL FOR NEXT