தமிழக செய்திகள்

தவெக எம்.எல்.ஏ.க்கள் பனையூர் அலுவலகம் வர அழைப்பு

கவர்னர் அர்லேகரை நேற்று விஜய் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

சென்னை,

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. புதிய வரவான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதனையடுத்து தமிழக கவர்னர் அர்லேகரை சந்தித்து விஜய் நேற்று மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

அப்போது அவர், த.வெ.க.வின் 108 எம்.எல்.ஏ.க்கள் மற் றும் காங்கிரசைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்கினார். ஆனால் அதை பெற்றுக்கொண்ட கவர்னர், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட் டார். இதனால் விஜய் இன்று முதல்-அமைச்சராக பொறுப்பேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை 11 மணிக்கு பனையூர் அலுவலகம் வருமாறு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார். கவர்னரை சந்தித்து நேற்று விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், இன்னும் பெரும்பான்மை கிடைக்காததால் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.